முதல்முறையாக காதலரின் புகைப்படத்தை பகிர்ந்த பூனம் பாஜ்வா !

Poonam-Bajwa-shares-photo-of-boyfriend-for-the-first-time--Shocked-fans

முதன்முறையாக தனது காதலரை அறிமுகப்படுத்தி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா.


Advertisement

கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான இயக்குநர் ஹரியின் சேவல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் நடிகை பூனம் பாஜ்வா. தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, முத்தின கத்திரிக்கா உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார்.

image


Advertisement

 

’சேவல்’ தவிர இவரது படங்கள் பெரியளவில் பாராட்டுக்களைக் குவிட்டாவிட்டாலும் பூனம் பாஜ்வாவுக்கு பெரிய ஃபாலோயர்ஸ் கூட்டமே சமூக வலைதளங்களில் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில், இவரை பின் தொடர்பவர்கள் மட்டுமே 2 மில்லியன் ஃபாலோயர்ஸ்களுக்குமேல்

image


Advertisement

காரணம், தொடர்ச்சியாக ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு எப்போதும் நெட்டிசன்களின் ஹாட் டாப்பிக்காக உள்ளார். காலை குட்மார்னிங்கை கூட பூனம் பாஜ்வாவின் புகைப்படத்துடன் ஆரம்பிக்கும் ரசிகர்கள் கூட்டமே இவருக்கு ஃபேஸ்புக்கில் உண்டு.

image

இந்நிலையில், இன்று தனது காதலரை முதன் முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிமுகப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பூனம் பாஜ்வா. அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் காதலருடன் மகிழ்ச்சியாக இருக்கும் பூனம் பாஜ்வா “பிறந்தநாள் வாழ்த்துகள் சுனில். நீதான் என் வேர், என் மைதானம், என் சிறகு. இந்த அழகான பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

என்னுடைய க்ரைம் பார்ட்னர், வாழ்க்கைத்துணை, ரொமாண்டிக் டேட், விளையாட்டுத் தோழன், எல்லா கனவுகளுக்கும் கற்பனைத் துணைவன். பிறந்தநாள் வாழ்த்துகள் பூபூ. வார்த்தைகளால் சொல்லக்கூடியவதைவிட நான் உன்னை அதிகம் நேசிக்கிறேன்” என்று நெகிழ்ச்சியோடு காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement