காவல் ஆய்வாளரை கண்டதும் துள்ளி குதித்து ஓடி வரும் கோயில் காளை !

temple-bull-come-with-enthusiastic-when-police-inspector-appear-in-jeep--madurai-melur-surprise

மதுரை மேலூர் காவல்ஆய்வாளர் பேருந்து நிலையம் வழியாக செல்லும்போதெல்லாம் துள்ளிகுதித்து அன்புகாட்டும் கோவில்காளை ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.


Advertisement

 image

மதுரை மாவட்டம் மேலூர் காவல் ஆய்வாளர் திரு.சார்லஸ் அவர்கள் பேருந்து நிலையம் வழியே செல்லும் போதெல்லாம் அவரை எதிர்பார்த்து காத்து இருப்பது போல சாலைகளில் திரியும் கோவில் காளை ஒன்று ஆனந்தத்தில் துள்ளி குதித்தவாறு வாகனத்தை நோக்கி ஓடி வருகிறது. காவல் ஆய்வாளர் தினமும் வாழைப்பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போன்றவற்றை காளைக்கு வழங்கி வருகிறார். மேலும் அவர் கொடுக்கும் உணவை நிதானமாக உண்டபின் நன்றி தெரிவிப்பது போல அவரது கையை நாக்கால் வருடிக் கொடுத்து விட்டுச் செல்கிறது. காவல் ஆய்வாளருக்கும் காளைக்கும் இடையே தினசரி நடக்கும் அந்த ஐந்து நிமிட பாசப்போராட்டம் காண்போரை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.


Advertisement

இந்த தகவலை தமிழக காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து பாரட்டியுள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement