நடிகர் விவேக்கின் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த்,விஜயகாந்த், அஜித்,விஜய்,சூர்யா,தனுஷ்,சிம்பு என தமிழின் அத்தனை முன்னணி நடிகர்ளுக்கும் நண்பராக வந்து காமெடியில் கலக்கிய நடிகர் விவேக் அமைதியின் நிறமான வெள்ளை நிற ஆடையில் அசத்தல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் போட்டோ ஷூட் நடத்தியிருக்கும் புகைப்படங்கள் வாவ் சொல்லவைக்கின்றன.
அதோடு, புகைப்படங்களை பார்த்தவுடன் விவேக்கா இல்லை விஸ்வாசம் பட அஜித்தா? என்று நம்மையே கேள்விக்கேட்டு திகைக்க வைக்கின்றன. வீரம், மற்றும் விஸ்வாசம் படங்களில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வேஷ்டி சட்டையில்தான் நடித்திருந்தார். அதே அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், அதே வெள்ளை நிற உடையில், அதே மீசையில் விவேக்கைப் பார்க்கும்போது ஒரு நிமிடம் அஜித்தோ என்று எல்லோரையும் நினைக்க வைத்துவிடுகிறார். இதில், விஸ்வாசம் படத்தில் விவேக்கும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் விவேக், கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’நான் தான் பாலா’ படத்தின் மூலம் ஹீரோவானார். மீண்டும் ஹீரோவாக கடந்த ஆண்டு அவர் நடிப்பில் ‘வெள்ளைப்பூக்கள்’ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது விவேக்கின் ஸ்டைலிஷ் புகைப்படங்ளை பாராட்டி தங்கள் பக்கங்களில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள், ‘செம்ம ஸ்டைலா இருக்கீங்க தலைவா… இயக்குநர்கள் இனி உங்கள் வீட்டுக் கதவைத்தான் தட்டப்போகிறார்கள்’ என்று ஊக்கப்படுத்தியுள்ளார்கள்.
போட்டோ ஷூட் குறித்து விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், ”என் சமீபத்திய போட்டோ ஷூட் திரையுலகாலும் பிறராலும் பாராட்டப் படுகிறது. அதற்கு முழு காரணம் காஸ்டியூம் ஸ்டைலிஷ் சத்யாவும் அவர் குழுவும் தான்” என்று தன்னை அழகான ஸ்டைலிஷான லுக்கில் காட்டிய காஸ்டியூம் ஸ்டைலிஷை பாராட்டியிருக்கிறார்.
Loading More post
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
"தமிழகத்தில் 3-வது அணி அமைவதை விரும்பவில்லை" - கே.எஸ்.அழகிரி
சேலம்: பள்ளி சென்ற மாணவருக்கு கொரோனா!
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!
“அவன் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன்!” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை, சகோதரி சிறப்பு பேட்டி