10,11,12 ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
10,12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்றும், 11ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாளும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்திருந்தது. அதன்படி 10,12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த முடிவுகளை மாணவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்..
மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற விரும்பும் மாணவர்கள் நவம்பர் 3 மற்றும் 4ம் தேதிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10,11,12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மறுக்கூட்டலுக்கு 205 ரூபாயையும், விடைத்தாள் நகல் பெற விரும்பும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் 275 ரூபாயையும் செலுத்த வேண்டும் எனவும் இதில் உயிரியல் பாடத்திற்கு மட்டும் 305ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் பெறும் மாணவர்கள் மட்டுமே மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க முடியும். விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் பாடத்தின் மறுகூட்டலுக்கு தற்போது விண்ணப்பிக்க கூடாது என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
Loading More post
தங்கம் சவரனுக்கு ரூ.608 குறைவு
தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் இழுபறி... தேமுதிகவிற்கு அதிமுக மீண்டும் அழைப்பு
'ஆட்டோ வீடு' வடிவமைத்த தமிழக இளைஞரை தேடும் ஆனந்த் மகேந்திரா!
விருப்ப மனு அளித்தவர்களுடன் மு.க.ஸ்டாலின் இன்று முதல் நேர்காணல்
மேற்குவங்கம்: பாஜக நிர்வாகியின் தாய் தாக்கப்பட்ட விவகாரம்; மகனே தாயை தாக்கியது அம்பலம்?
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?