ஆன்லைனில் ரம்மி விளையாடி மன அழுத்தத்திற்கு உள்ளான இளைஞர் ஒருவர் தூக்குப்போட்டுக்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மண்ணாங்கட்டி என்பவரின் மகன் குமரேசன். தனியார் வங்கி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்த இவர் பெரம்பூர் அருகே தனது நண்பர்களுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஆன்லைனில் ரம்மி விளையாடி மன அழுத்தத்தில் இருந்த குமரேசன் நீண்ட நாட்களாக தனது சொந்த ஊருக்குச் செல்லாமல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், நேற்று சரியாக இரவு 10 மணியளவில் அருகில் உள்ள அறையில் தூங்கிக்கொண்டிருந்த குமரேசனின் செல்போனில் அலாரம் அடித்தது கேட்டு நண்பர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது குமரேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு கே.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்