இந்தியா, சீனா, நைஜிரியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானில் மட்டும் நுரையீரல் தொற்றால் ஆண்டுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் மரணமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹரீஷ் நாயர் தலைமையிலான குழு மூச்சு குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று குறித்து உலகம் முழுவதும் ஆய்வு மேற் கொண்டனர். அதில் ஆண்டுக்கு 3 கோடியே 30 லட்சம் குழந்தைகள் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இந்தியா, சீனா, நைஜிரியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நோய் சுவாச உறுப்புகளை கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் 2-வது வயதில் அதிக அளவில் தாக்குகிறது. நுரையீரல் தொற்று நோயால் ஆண்டுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் மேற்கண்ட 5 நாடுகளில் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை நோயினால் சர்வதேச அளவில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் பாதி அளவாகும். இந்த நோயில் இருந்து மருந்து மாத்திரைகள் மூலம் குழந்தைகள் இறப்பை தடுக்க முடியும். அதற்கான மருந்து இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வம்சாவளி நிபுணர் ஹரீஷ் நாயர் தெரிவித்துள்ளார்.
Loading More post
பிருத்வி ஷா - தவான் அதிரடி! சென்னையை வீழத்தியது டெல்லி கேபிடல்ஸ்!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ஜைக்கா நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் - ஆர்.டி.ஐ மூலம் தகவல்
தியேட்டரில் கூடுதலாக ஒரு காட்சி - தமிழகத்தில் புதிய கொரோனா தடுப்பு விதிமுறைகள்
அதிமுக கடலூர் எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம் உட்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம்
தமிழகத்தில் 6 ஆயிரத்தை நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு