‘டெஸ்ட் போட்டிக்கு கே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன்? சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சரமாரி கேள்வி

Why-Ranji-players-leave-out-AND-KL-Rahul-SELECTED-TO-PLAY-in-THE-INDIAN-Test-team-AGAINST-AUSTRALIA-Sanjay-Manjrekar-criticizes-BCCI

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. 


Advertisement

image

பிசிசிஐ நேற்று இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. 


Advertisement

இந்நிலையில், ரஞ்சி வீரர்களை புறந்தள்ளி விட்டு கே.எல்.ராகுலை தேர்வு செய்தது ஏன்? என இந்திய கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

“ஐபிஎல் செயல்பாட்டை அடிப்படையாக வைத்து டெஸ்ட் அணிக்கு ஒரு வீரரை தேர்வு செய்வது அப்பட்டமாக உள்ளது. அதிலும் கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக தொடர்ந்து சொதப்பி வரும் ஒரு வீரரை அணிக்குள் தேர்வு செய்வது ஏன் என்பதே புரியாத புதிராக உள்ளது. இது ரஞ்சி கோப்பையில் ஆர்வமாக விளையாடும் வீரர்களிடையே தன்னம்பிக்கையை இழக்க செய்யும். 


Advertisement

குறிப்பாக கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் ராகுலின் பேட்டிங் ஆவரேஜ் 29 ரன்களுக்கும் கீழ் தான். இருப்பினும் அவர் பக்கம் அதிர்ஷ்ட காற்று வீசியுள்ளது. இதனை அவருக்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொள்வார் என நம்புவோம்” என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement