பட்டப்பகலில் நடுரோட்டில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை - சிசிடிவி காட்சி..!

21-year-old-woman-shot-dead-in-Haryana

ஹரியானாவில் சாலையில் சென்ற பெண் காரில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement


ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் மாவட்டத்தில் பல்லாப்கார் என்ற பகுதியில் உள்ள ஒரு கல்லூரியிலிருந்து ஒரு பெண் தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்துகொண்டிருந்தார். அப்போது காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரை காருக்குள் இழுத்து கடத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் தப்பிக்க முயன்றதால் அவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அவசர அவசரமாக காரில் ஏறித் தப்பிச் சென்றுவிட்டனர். சிகிச்சைக்காக அந்த பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அந்த பெண் உயிரிழந்துவிட்டதாக பல்லாப்கார் ஏசிபி ஜெய்வீர் சிங் ராத்தி தெரிவித்துள்ளார்.

image


Advertisement

முதல் கட்ட விசாரணையில் இறந்த அந்தப் பெண் நிகிதா தாமர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பி.காம் இறுதி ஆண்டு படித்துவந்தார் என்றும், அவரை மதம்மாறி திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியதால் அந்தப் பெண் மறுத்ததாகவும் அவர் குடும்பத்தார் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் காதலர் சோன்ஹாவைச் சேர்ந்த டௌசிஃப் எனவும், சில மாதங்களுக்கு முன்பே அந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காக அவர்மீது புகார் கொடுத்திருப்பதாகவும் சிங் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement