காணொளி வழக்கு விசாரணையில் சட்டையின்றி தோன்றிய வழக்கறிஞர்: நீதிபதிகள் அதிர்ச்சி.!

Supreme-Court-Judges-Shocked-To-See-Advocate-Shirtless-During-VC-Hearing

உச்சநீதிமன்றத்தில் சுதர்சன் டிவி வழக்கு வீடியோ கான்பரன்ஸ் விசாரணையின்போது, வழக்கறிஞர் சட்டையில்லாமல் திரையில் தோன்றியதால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.


Advertisement

image

உச்சநீதிமன்றத்தில் சுதர்சன் டிவியின் வழக்கு விசாரணை நேற்று தொடங்கியபோது வீடியோ கான்பரன்ஸ் திரையில் சில நொடிகள் வழக்கறிஞர் சட்டையில்லாமல் இருக்கும் காட்சிகள் தோன்றியது, இதனால் நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர். நீதிபதி டி ஒய் சந்தரசூட் இந்த அமர்வின் நீதிபதியாக இருந்தார், யார் இந்த வழக்கறிஞர் என்று நீதிபதி தொடர்ச்சியாக மூன்றுமுறை கேட்டார், ஆனால் பதில் இல்லை, அந்த திரை உடனடியாக லாக் ஆஃப் ஆனது.


Advertisement

அதன் பின்னர் இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி சந்தரசூட், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் இதுபற்றி புகார் செய்தார் “ சில வழக்கறிஞர்கள் சட்டையில்லாமல் வீடியோ கான்பரன்ஸில் கலந்துகொள்வது நல்லொழுக்கம் இல்லை” என அவர் தெரிவித்தார். இது மன்னிக்க முடியாத செயல் என்று சொலிசிட்டர் ஜெனரலும் தெரிவித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement