பாகிஸ்தானுடனான போர் தேதியை மோடி குறித்துவிட்டார்: உ.பி. பாஜக தலைவர்

Narendra-Modi-had-set-the-time-for-war-with-Pakistan-and-China--UP-bjp-president-Swatantra-Dev-Singh

370 ரத்து, ராமர் கோயில் கட்டப்படுவது, சீன-பாகிஸ்தானுடனான போர் தேதி ஆகிய எல்லாம் ஏற்கெனவே மோடியால் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று உத்தரபிரதேச பாஜக தலைவர் ஸ்வந்திரா தேவ்சிங் கூறியுள்ளார்.


Advertisement

image

உத்தரப்பிரதேச பாஜக தலைவர் ஸ்வந்திரா தேவ் சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு பல்லியாவில் நடந்த ஒரு கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான போருக்கான நேரத்தை நிர்ணயித்துவிட்டதாக பேசியுள்ளார்


Advertisement

ஸ்வந்திரா தேவ்சிங் கட்சி ஊழியர்களிடம் பேசிய வீடியோவில் “இது மோடிஜியால் முடிவு செய்யப்பட்டுவிட்டது. எல்லாவற்றிற்கும் தேதி நிர்ணயிக்கப்பட்டுவிட்டது, எப்போது என்ன நடக்கும் என்று எல்லாம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. 370 வது பிரிவு எப்போது ரத்து செய்யப்படும், எப்போது ராமர் கோயில் கட்டப்படும், எப்போது சீனாவுடன் போர் நடத்துவது, எப்போது பாகிஸ்தானுடன் போர் நடத்துவது என எல்லாம் முடிவு செய்யப்பட்டுவிட்டது” என கூறியுள்ளார்

இது தொடர்பாக சர்ச்சை வெடித்தபின் பேசிய தேவ்சிங் "நான் கட்சி பணியாளர்களுக்காக உரையாற்றினேன், புழக்கத்தில் விடப்படுவதற்காக நான் எதுவும் கூறவில்லை. முதலில் சூழலைப் பார்க்க வேண்டும்" என கூறினார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement