ரோகித் சர்மாவுக்கு என்னதான் ஆச்சு ? உண்மையை சொல்லுங்கள் - சுனில் கவாஸ்கர் கேள்வி !

Sunil-Gavaskar-demands-transparency-on-Rohit-Sharma-injury

ரோகித் சர்மா காயம் குறித்து வெளிப்படையாக கூற வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த இரு போட்டிகளில் அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவர் காயம் காரணமாக விளையாடவில்லை என அணி நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை பொல்லார்ட் ஏற்றுள்ளார். ரோகித் சர்மாவுக்கு காயம் என கூறியுள்ள அணி நிர்வாகம் அது எந்த வகையான காயம் என தெரிவிக்கவில்லை.

image


Advertisement

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியுள்ள சுனில் கவாஸ்கர் "வலைப் பயிற்சியின்போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். அது என்ன காயம் என தெரியவில்லை. ஆனால் கடந்த போட்டிக்கு முன்பு அவர் மீண்டும் வலைப் பயிற்சி செய்தார். அவருக்கு ஏற்பட்ட காயம் தீவிரமானதாக இருந்தால் நிச்சயம் அவரால் பயிற்சி செய்திருக்க முடியாது. இப்போது இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. டிசம்பர் 17 ஆம் தேதி டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது" என்றார்.

image

மேலும் "அவர் வலைப்பயிற்சியில் ஈடுபடுவதால் அது என்ன மாதிரியான காயம் என தெரியவில்லை. எனவே இந்த விவகாரத்தில் வெளிப்படை தன்மை தேவை. ரோகித் சர்மாவுக்கு என்ன காயம் என்பதை ரசிகர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். வெளிப்படையாக கூறினால் ரோகித் சர்மாவுக்குதான் உதவியாக இருக்கும். மும்பை அணி நிர்வாகம் ரோகித் காயத்தை வெளிப்படையாமல் கூறாமல் இருப்பதற்கு காரணங்கள் இருக்கலாம் ஆனால் தெரிவிப்பது அவர்களது கடமை" என்றார் சுனில் கவாஸ்கர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement