ஐபிஎல் கிரிக்கெட்டின் 47-ஆவது ஆட்டத்தில் டெல்லி அணி ஹைதராபாதை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் டெல்லி வெற்றிப்பெற்றால் டெல்லி அணி தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும்.
இதுவரை ஆடிய 11 ஆட்டங்களில் டெல்லி 7 வெற்றிகளையும், ஹைதராபாத் 4 வெற்றிகளையும் பதிவு செய்துள்ளன. இரு அணிகளுமே கடைசி ஆட்டத்தில் தோல்வியைச் சந்தித்து வந்துள்ளன. இந்தத் தொடரில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டெல்லி அணி கொல்கத்தா, பஞ்சாபுக்கு எதிராக கடைசி 2 ஆட்டங்களில் தோல்வியடைந்தது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆட்டத்தில் வென்று பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்யும் முனைப்புடன் டெல்லி களம் காணும். டெல்லியின் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டுமே சிறப்பாக இருக்கிறது. பேட்டிங்கில் ஷிகர் தவன் தவிர இதர வீரர்கள் மட்டும் சற்று நிலையாக ஆட வேண்டியுள்ளது. பவுலிங்கில் ரபாடா மற்றும் நார்ட்ஜே எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
ஹைதராபாத்தைப் பொருத்தவரை பிளே-ஆஃப் தகுதி பெற நூலிழை வாய்ப்பு இருக்கிறது. இந்த ஆட்டத்திலும், இனி வரும் ஆட்டங்களிலும் அந்த அணி வென்றாக வேண்டும் என்பதுடன், இதர அணிகள் மோதும் ஆட்டங்களின் முடிவுகளும் அந்த அணிக்குச் சாதகமாக வேண்டும். ஹைதராபாத் பெரிதும் பேட்டிங்கையே நம்பியுள்ளது. அதிலும் பேர்ஸ்டோ, வார்னர், மணீஷ் உள்ளிட்டோரே அணியின் ஸ்கோரில் அதிகம் பங்களிப்பு செய்கின்றனர். விஜய் சங்கர் சிறப்பாக ஆடினாலும், அவரால் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலவில்லை.
பவுலிங்கில் ஜேசன் ஹோல்டர், ரஷீத் கான், நடராஜன் ஆகியோரை பெரிதும் நம்பியிருக்கிறது. ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் இதுவரை 16 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், ஹைதராபாத் 10, டெல்லி 6 ஆட்டங்களில் வென்றுள்ளன.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!