ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டி20 தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகிய தமிழக இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின், வருண் சக்ரவர்த்தி உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்கள் பலரும் அசத்தி வருகின்றனர்.
அதில், கொல்கத்தா நைட்ரைடஸ் அணிக்காக விளையாடும் வலது கை சுழற்பந்துவீச்சாளரான வருண் சக்ரவர்த்தி எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார்.
தோனி உள்ளிட்ட மிக முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் வலுவான அணியாக கருதப்படும் டெல்லிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசரவைத்தார்.
11 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
#TeamIndia T20I squad: Virat Kohli (Capt), Shikhar, Mayank Agarwal, KL Rahul (vc & wk), Shreyas Iyer, Manish, Hardik Pandya, Sanju Samson (wk), Ravindra Jadeja, Washington Sundar, Yuzvendra Chahal, Jasprit Bumrah, Mohd. Shami, Navdeep Saini, Deepak Chahar, Varun Chakravarthy — BCCI (@BCCI) October 26, 2020
அதேபோல், வாஷிங்டன் சுந்தரும் பெங்களூர் அணிக்காக விளையாடி ஆல்ரவுண்டராக சிறப்பான பங்களிப்பை செலுத்தி வருகிறார். அதிக விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் குறைவான ரன்களையே ஒவ்வொரு போட்டியிலும் கொடுத்து வருகிறார். நடப்பு சீசனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது பவுலிங் எக்கனாமி வெறும் 5.72 மட்டுமே.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் டி20 தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி ஆகிய தமிழக இளம் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வருண் சக்ரவர்த்தி இதுவரை விளையாடியதில்லை. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் அது அவருக்கு அறிமுக போட்டியாக அமையும்.
டி20 அணி விவரம்:
விராட் கோலி, ஷிகர் தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், பும்ரா, முகமது ஷமி, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வருண் சக்ரவர்த்தி
அதேபோல், டெஸ்ட் தொடருக்கான கூடுதல் பந்துவீச்சாளர்கள் குழுவில் யார்க்கர் புகழ் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் இடம்பெற்றுள்ளார். அதேபோல், டெஸ்ட் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த அன்பவ வீரரான ரவிசந்திர அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்