மாதவன் நடித்த ’யாவரும் நலம்’ சூர்யாவின் ‘24’ படங்களை இயக்கிய விக்ரம் கே.குமாரின் அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தமிழில் சிம்பு நடித்த அலை, மாதவன் நடித்த யாவரும் நலம், சூர்யா நடித்த ’24’ ஆகிய படங்களை இயக்கி தன் படங்களுக்கென தனித்துவமான ரசனை கொண்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் இயக்குநர் விக்ரம் கே.குமார். தமிழில் படங்கள் இயக்க நீண்ட வருடங்கள் எடுத்துக்கொண்டாலும் இவரது படங்கள் என்றாலே நம்பிச் செல்பவர்கள் உண்டு. இவர் தெலுங்கில் முன்னணி இயக்குநராக உள்ளார்.
ஆங்கில மொழியில் இயக்கிய இவரது முதல் படமான ’சைலண்ட் ஸ்ட்ரீம்’ தேசிய விருதை வென்ற படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, தெலுங்கில் வெளியான மனம் படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதையும் வென்றுள்ளார்.
விக்ரம் கே.குமார் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘யாவரும் நலம்’ மெகா ஹிட் அடித்தது. அதேபோல, சூர்யா, சமந்தா நடிப்பில் இயக்கிய டைம் ட்ராவல் கதையான ‘24’ படமும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில், தனது அடுத்தப் படத்தை அறிவித்துள்ளார். தமிழில் மூன்று படங்களும் தெலுங்கில் 5 படங்களும் இயக்கியவர் இம்முறையும் தெலுங்கு படத்தைதான் இயக்கவுள்ளார்.
Two people I have to thank for being a special part of my life Dilraju sir for my first film and @Vikram_K_Kumar for manam.thankful for being able to collaborate with them again and the legendary @pcsreeram sir #ThankYouTheMovie launched today.#NC20 @MusicThaman @BvsRavi pic.twitter.com/XkbRiGnVxj — chaitanya akkineni (@chay_akkineni) October 25, 2020
இப்படத்தில், ஹீரோவாக நடிக்கவிருப்பவர் நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, இந்தக்கூட்டணி கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘மனம்’ படத்தில் இணைந்து வெற்றிக் கூட்டணியானது என்பது குறிப்பிடத்தக்கது.
#ThankYouTheMovie
My next project with @Vikram_K_Kumar after #ISHQ #YavarumNaalam it Will be “Thankyou” the movie.
Thank you DilRaju sir
Thank you ‘@Vikram_K_Kumar
Thank you @chay_akkineni
Thank you @BvsRavi
The journey begins.
May the force be with us. pic.twitter.com/GY1tpN3IeI — pcsreeramISC (@pcsreeram) October 25, 2020
இதுகுறித்து தனது ட்விட்டரில் நெகிழ்ச்சியான பதிவிட்டுள்ளார் நடிகர் நாகசைதன்யா. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்வது நம்மூர் பி.சி ஸ்ரீராம்தான். அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.
Loading More post
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
"தமிழ்நாட்டிலேயே ரொம்ப நல்ல டீ இது"-ருசித்து பாராட்டிய ராகுல்காந்தி
அசாம்: கோயில் வழிபாட்டுடன் நாளை பரப்புரையை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி
9 சீரிஸ் மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்சை அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ்
இனப்படுகொலை குற்றத்திலிருந்து இலங்கையை காப்பாற்றும் வகையில் தீர்மானம்: சீமான் கண்டனம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி