’தில்லுக்கு துட்டு’ இயக்குநரின் அடுத்த பேய் படத்தில் சிவா: தலைப்பு என்ன தெரியுமா?

Do-you-know-the-title-of-the-directors-next-ghost-film-Thillukku-thuttu--

சி.எஸ் அமுதன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தமிழ் படம் மூலம் புகழ் பெற்றார் மிர்ச்சி சிவா. அதற்கடுத்ததாக, அவர் நடித்த படங்கள் அனைத்துமே காமெடி படங்கள்தான். இந்நிலையில், இவர் இயக்குநர் ராம்பாலா இயக்கத்தில் ’இடியட்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிவா.


Advertisement

image

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவாவும், ஹீரோயினாக நடிக்கும் நிக்கி கல்ராணியும் பேயை கம்பில் தூக்கிச் செல்கிறார்கள் என்பதால், கன்ஃபார்ம் இது பேய் படம்தான். அதோடு, இயக்குநர் ராம்பாலா இதற்கு முன் இயக்கிய தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2 என்று இயக்கிய இரண்டு படங்களுமே பேய் படம்தான்.


Advertisement

வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றவை. அதனால், மூன்றாவது படத்தையும் பேய்யையே மையப்படுத்தி எடுக்கிறார். ஹாட்ரிக் வெற்றி கொடுக்குமா என்பது படம் வெளியானாதால் தெரியும்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement