ஃபிரீஸரில் எரிந்த நிலையில் சடலமாக இருந்த மதுக்கடை ஊழியர்: ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்

Alwar-wine-shop-employee---s-charred-body-found-in-freezer

ஆந்திர மாநிலம் ஆல்வார் மாவட்டத்திலுள்ள மதுக்கடையில், ஃபிரீஸரில் எரிந்த நிலையில் மதுக்கடை ஊழியரின் உடல் மீட்கப்பட்டது.


Advertisement

image

ஆந்திர மாநிலத்தின், ஆல்வார் மாவட்டத்தின் கம்பூர் கிராமத்தில் உள்ள ஒரு மதுக்கடையின் ஃபிரீஸரிலிருந்து 23 வயது இளைஞனின் எரிந்த உடல் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். மதுக்கடை உரிமையாளர்களால் இவர் தீவைக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்று இறந்தவரின் குடும்ப உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையின்படி ”உயிரிழந்த கமல் கிஷோர் என்ற இளைஞர் ராகேஷ் யாதவ் மற்றும் சுபாஷ் சந்த் ஆகியோருக்கு சொந்தமான ஒரு மதுக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்தார். கடந்த ஐந்து மாதங்களாக கிஷோருக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. சனிக்கிழமை, மாலை 4 மணிக்கு உரிமையாளர்கள் தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், கிஷோர் அவருடன் திரும்பி வரவில்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்தனர்” என்று தெரிவித்தனர்.


Advertisement

ஞாயிற்றுக்கிழமை நண்பகலில், மதுக்கடையின் பின்னால் அமைந்துள்ள ஒரு கொள்கலன் தீப்பிடித்ததை உள்ளூர்வாசிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர், தீ அணைக்கப்பட்ட பின்னர், கிஷோரின் மோசமாக எரிந்த உடல் மதுபானத்தை சேமிக்கும் கொள்கலன் உறைவிப்பானின் உள்ளே இருந்து கண்டெடுக்கப்பட்டது. “பூர்வாங்க விசாரணையில் கொலை குறித்து ஆதாரம் எதுவும் இல்லை. இருப்பினும் நாங்கள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை. தீ எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம், மேலதிக விசாரணை நடந்து வருகிறது ”என்று போலீஸ் சூப்பிரண்டு ராம்மூர்த்தி ஜோஷி கூறினார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement