[X] Close

தேனீ மனிதனின் மிரள வைக்கும் கின்னஸ் சாதனை - ஃபேஸ்புக்கில் வைரலான வீடியோ

Subscribe
Honey-man-breaks-Guinness-World-Record

பெரும்பாலும் கின்னஸ் உலக சாதனைகள் நம்மை வியக்கவைக்கும். இதுபோன்ற வீடியோக்களை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ளும்போது அது நமக்கு அதிர்ச்சியூட்டும், பிரமிக்கவைக்கும். அந்த வகையில் ரூவான் லியாங்மிங் என்பவரின் வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் கின்னஸ் சாதனை பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.


Advertisement

’’சீனாவைச் சேர்ந்த ரூவான் தேனீக்களை அதிமாக நேசிக்கிறார்’’ என்ற தலைப்பிட்டப்பட்ட இந்த வீடியோவில் 6.37 லட்சத்துக்கும் அதிகமான தேனீக்களை தன்மேல் சூழவைத்துள்ளார். இது 2016ஆம் ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது.


Advertisement

இந்த வீடியோ வெளியிட்ட சிலமணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் ஆச்சர்யமான மற்றும் எதிர்மறையான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

பொதுவாக தேனீக்களை நாம் தொந்தரவு செய்யாவிட்டால் அது கொட்டாது. ஒருமுறை தனது கொடுக்கால் கொட்டிவிட்டால் இறந்துவிடும். அந்த வீடியோவில் தேனீக்கள் நிலையற்ற தன்மையில் இருப்பதைக் காட்டுகிறது. பொறுமையை கையாண்ட ரூவான் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close