தெலங்கானாவில் உள்ள கன்னியகா பரமேஸ்வரி தேவி கோயில் தசரா பண்டிகையை முன்னிட்டு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தாள்களால் செய்யப்பட்ட ஓரிகமி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
Decorations with currency worth Rs 1,11,11,111 for #Dhanalakshmi avatar of #KanyakaParameswariDevi at #Gadwal #Telangana as part of #Navaratri; three years ago it was Rs 3,33,33,333 currency decoration ... Pandemic, economic slowdown presumably has its effects @ndtv @ndtvindia pic.twitter.com/uv3JwHgICV — Uma Sudhir (@umasudhir) October 26, 2020
ஹைதராபாத்திற்கு தெற்கே 180 கி.மீ தொலைவில் உள்ள தெலங்கானாவின் கட்வாலில், வசவி கன்யகா பரமேஸ்வரி கோயிலில் துர்காவின் ஒரு வடிவமான தேவிகோயில் 1 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பணத்தாள்களால் செய்யப்பட்ட ஓரிகமி பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மாலைகள் மற்றும் பூங்கொத்துகளை உருவாக்க வெவ்வேறு வண்ணங்களின் அழகாக மடிந்த பணத்தாள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்போதையை சூழலில் இது அதிக தொகைபோல தொன்றினாலும் கடந்த காலங்களில் இதைவிட அதிகமான தொகைக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த தேவி கோவில் 3,33,33,333 மதிப்புள்ள பணத்தாள்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது என்று கோவில் பொருளாளர் பி.ராமு கூறினார்.
”கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் தெய்வத்தை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் பணத்தாள்களின் மதிப்பு இந்த ஆண்டு குறைவாக உள்ளது. இந்த பணம் உள்ளூர் சமூகத்தில் உள்ள பக்தியுள்ளவர்களின் பங்களிப்பாகும், பூஜை முடிந்த பிறகு அவர்களிடம் இந்த பணம் திருப்பித் தரப்படுகிறது. இந்த ஆண்டு, சுமார் 40 முதல் 50 பேர் தனித்துவமான அலங்காரங்களுக்கு பங்களித்துள்ளனர், ”என்று அவர் கூறினார்.
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்