பண்டிகைக் கால தள்ளுபடி விற்பனை.. களம் இறங்கும் ஃபிளிப்கார்ட், அமேசான்.!

Flipkart-and-Amazon-gear-up-for-second-round-of-sale-and-deals--announce-new-offers

ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்கள் பண்டிகைக் கால சிறப்பு விற்பனைக்கான சலுகைகள், தள்ளுபடிகளை தொடர்கின்றன.


Advertisement

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களான ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடங்கிய பண்டிகைக் கால சிறப்பு விற்பனையை இன்னும் முடிக்கவில்லை. ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ என்ற பெயரில் அமேசானும், ‘பிக் பில்லியன் டேஸ் ‘ என்ற பெயரில் பிளிப்கார்டும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் எக்கச்சக்கமான சலுகைகள், தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.

ஃபிளிப்கார்டில் அக்டோபர் 22-ம் தேதி தொடங்கிய தசரா விற்பனை, வரும் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் ஃபிளிப்கார்ட்டின் தீபாவளி விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 வரை தொடர்கிறது. அதேசமயம் அமேசான் அதன் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனைக்கான இறுதி தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த சிறப்பு விற்பனை தீபாவளி வரை நீடிக்க வாய்ப்புள்ளது.


Advertisement

image

அதே நேரத்தில், இப்போது அமேசான், ‘ஹேப்பினஸ் அப்கிரேட் டேஸ்’ என்ற புதிய விற்பனையை அறிவித்துள்ளது. அமேசானில் உடனடி தள்ளுபடிக்கு அதிகமான வங்கிகள் இப்போது வந்துள்ளன. ‘’ஆக்சிஸ் வங்கி, சிட்டி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆக்சிஸ் வங்கி வாடிக்கையாளர்கள் இஎம்ஐ பரிவர்த்தனைகளில் கூடுதலாக 10% உடனடி தள்ளுபடியைப் பெறலாம். அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுடன் அவர்கள் 5 சதவீத உடனடி தள்ளுபடி மற்றும் 5 சதவீதம் வரை வெகுமதி புள்ளிகளைப் பெற முடியும்” என்று அமேசான் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபிளிப்கார்டின் தீபாவளி சிறப்பு விற்பனையில் ஆக்சிஸ் வங்கி அட்டை பயனர்கள் உடனடி 10 சதவீத தள்ளுபடியைப் பெறுவார்கள்.


Advertisement

ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேஜெட்களைப் பொருத்தவரை, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட்டில் புதிய டீல்ஸ்கள் மோசமாக உள்ளன. உதாரணமாக, கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் போது ரூ 47,999 விலையில் விற்கப்பட்ட ஐபோன் 11 இப்போது ரூ.49,999 ஆக உள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement