ஐபிஎல் 2020: பிளே-ஆஃப் சுற்றை உறுதிப்படுத்துமா கொல்கத்தா? பஞ்சாப் அணியின் அதிரடி தொடருமா?

KKR-vs-KXIP-Match-Prediction
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 46-வது ஆட்டத்தில் இன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
 
பஞ்சாப் அணி 11 போட்டிகளில் விளையாடி, 5 வெற்றி, 6 தோல்வி என 10 புள்ளிகளுடன் முன்னேறி வருகிறது. குறிப்பாக பஞ்சாப் அணி கடந்த 4 போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.
 
பேட்டிங்கில் கேப்டன் கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன் நம்பிக்கை அளிக்கின்றனர். ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடாத அகர்வால் இன்று ஆடும் லெவனில் இடம்பெறலாம். கெய்ல், மேக்ஸ்வெல் எழுச்சி பெற வேண்டும். பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய், முருகன் அஷ்வின் பலம் சேர்க்கின்றனர்.
 
image
 
இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 11 போட்டிகளில் விளையாடி, 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் வலுவான நிலையில் உள்ளது. கடைசியாக டெல்லி அணிக்கெதிராக வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள கொல்கத்தா அணி இன்றும் சாதித்தால் 14 புள்ளிகளுடன் ‘பிளே–ஆப்’ சுற்றின் வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
 
பேட்டிங்கில் சுப்மன் கில், கேப்டன் இயான் மார்கன் ஆறுதல் தருகின்றனர். தினேஷ் கார்த்திக் கைகொடுத்தால் நல்லது. டில்லிக்கு எதிராக அரைசதமடித்த சுனில் நரைன், நிதிஷ் ராணா மீண்டும் அசத்தலாம். சுழலில் தமிழகத்தின் வருண் சக்கரவர்த்தி அசத்துகிறார். சுனில் நரைன், கம்மின்ஸ் விக்கெட் வேட்டை நிகழ்த்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.
 
image
 
 
கொல்கத்தா உத்தேச அணி: சுப்மான் கில், நிதீஷ் ராணா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக், சுனில் நரைன், இயன் மோர்கன் (கேப்டன்), பாட் கம்மின்ஸ், லாக்கி பெர்குசன், கமலேஷ் நாகர்கோட்டி, பிரசீத் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி
 
பஞ்சாப் உத்தேச அணி: கே.எல்.ராகுல் (கேப்டன்), மந்தீப் சிங், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், க்ளென் மேக்ஸ்வெல், தீபக் ஹூடா, கிறிஸ் ஜோர்டான், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
 
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement