கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..! தேதி அறிவிப்பு.!

When-was-the-first-look-of-Karthi-Sultan-released-Details-inside

கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  இன்று வெளியாகிறது. 


Advertisement

 

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று காலை 10 மணிக்கு அமேசான் ப்ரைம் யூடியூப் தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தத் ட்ரெய்லரைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் சுல்தான் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாக இருக்கிறது. சரியாக இன்று மாலை 3.30 மணிக்கு வெளியாக உள்ளது.

ராஷ்மிகா மந்தனா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும்  இப்படத்தை  ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர், அருவி உள்ளிட்டப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸ் தயாரித்துள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement