ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிப்பெற 196 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை அணி.
அபுதாபியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக இஷான் கிஷனும், டிகாக்கும் களமிறங்கினர். இதில் ஜோப்ரா ஆர்ச்சரின் அற்புதமான பந்துவீச்சில் டிகாக் கிளீன் போல்டாகி வெளியேறினார். இதனையடுத்து இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த சூர்ய குமார் யாதவ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் இஷான் கிஷான் 37 ரன்னில் அவுட்டானார். மறுமுனையில் விளாசிய சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்திருந்தபோது ஸ்ரேயாஸ் கோபால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மும்பை ரன்னை உயர்த்துவார் என நினைத்த பொல்லார்ட் 6 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார். ரன் சேர்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்த மும்பையை திவாரியும், ஹர்திக் பாண்ட்யாவும் சரிவிலிருந்து மீட்க பாடுபட்டனர்.
இதில் திவாரி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக ரன்களை சேர்த்தார். இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 60 ரன்களை எடுத்தார். அதில் 7 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடங்கும். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?