”அப்பப்பா... ஆளே மாறிட்டாரு... - இப்படியும் ஒரு கின்னஸ் சாதனை..!

Meet-The-Man-With-A-World-Record-For-Most-Body-Modifications

 பச்சைக்குத்துவதையும், அணிகலன்கள் அணிவதையும் தனது வாழ்நாள் பொழுதுபோக்காக மாற்றி கின்னஸ் புத்தகத்தில் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.  


Advertisement

image

இன்றைய தேதியில் பச்சைக் குத்திக்கொள்வதும், வித்தியாசமான அணிகலன்களை அணிந்து கொள்வதும் மிக இயல்பான விஷயமாக மாறிவிட்டது. ஆனால் அதையே வாழ்நாள் பொழுது போக்காக மாற்றி தனது பெயரை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெயரச் செய்திருக்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர். யார் அவர் என்று கேட்கிறீர்களா?


Advertisement

அவர்தான் ரோல்ஃப் புச்சோல்ஸ். இயல்பில் தகவல் தொழில்நுட்ப ஊழியரான இவர், தனது 40 வயதில் முதல் பச்சையையும், குண்டு மணியையும் குத்த ஆரம்பித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தனது உடம்பின் கண் இமைகள், உதடுகள், மூக்கு, காதுகள் நெற்றி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் குண்டுமணிகளையும், அணிகலன்களையும் அணிவதை வழக்கமாக வைத்துக்கொண்ட இவர் இன்று அடையாளமே தெரியாத நபராக மாறி இருக்கிறார். இது வரை 453 வகையான அணிகலன்களை ரோல்ஃப் அணிந்துள்ளார். இவரது வித்தியாசமான முயற்சிக்கு கடந்த 2010 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைக்கான பட்டம் கொடுக்கப்பட்டது. மொத்தமாக 516 முறை உடலை மாறுதலுக்கு உட்படுத்தியிருப்பது ரோல்ஃப் இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என கை விரிக்கிறார்.

 


Advertisement

 

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement