எப்படி நம்ம ட்ரம்ஸ் அடி..? நெட்டிசன்களை அலற விட்ட 5 வயது சிறுமி - ட்விட்டர் வைரல்.!

Amazing-video-of-5-year-old-girl-playing-drums-goes-viral-Unreal-says-Twitter

5 வயது சிறுமியின் அசாத்தியத் திறமை தற்போது சமூக வலைதளங்களை கதறவிட்டுக்கொண்டிருக்கிறது. 


Advertisement

இணையத்தில் அவ்வப்போது சிறுவர்கள் செய்யக்கூடிய சேஷ்டைகள் வைரலாகும். அந்த வரிசையில் சிறுவர்களின் அசாத்திய திறமையும் சில நேரங்களில் சமூக வலைதளங்களை கதறவிட்டிருக்கின்றன. அந்த வகையில் தற்போதும் ஒரு வீடியோ சமூகவலைதளங்களை அலற விட்டுக்கொண்டிருக்கிறது.

என்ன வீடியோ என்று கேட்கிறீர்களா,  5 வயது சிறுமி ஒருவர், குச்சியால் ட்ரம்களை வாசித்தே பிரித்தெடுக்கும் வீடியோதான் அது. அந்த வீடியோவின் பின்னணியில் ஒரு பாடலுக்கான இசை ஒலித்துக்கொண்டிருக்க, அந்த பாடலுக்கான ட்ரம்ஸ் பாகத்தை மட்டும் சிறுமி வாசிக்கிறாள். வாசிக்கும் போதே குச்சியில் சிறுமி செய்யும் வித்தைகள் நெட்டிசங்களை வாயைப் பிளக்க வைத்திருக்கிறன. இந்த வீடியோவை பார்த்த பேஸ்கட் பால் வீரர் ரெக்ஸ் சாப்மேன் இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “5 வயதா.... உண்மையில்லை” என்று பகிர்ந்துள்ளார். அவருடன் இணைந்து பல ட்விட்டர்வாசிகளும் சிறுமியின் வீடியோவை தங்களது பக்கங்களில் ஷேர் செய்து பாராட்டுகளை பொழிந்து வருகின்றனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement