[X] Close

"புள்ளிப் பட்டியலை விடுங்கள், கிரிக்கெட்டை என்ஜாய் பண்ணணும்" - வெற்றிக்கு பின்பு தோனி !

Subscribe
You-have-to-enjoy-the-game-no-matter-where-you-are-on-the-table-says-Dhoni

புள்ளிகள் பட்டியலை பற்றி கவலைப்படாமல் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியையும் மகிழ்ச்சியுடன் விளையாட வேண்டும் என்று சென்னை அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.


Advertisement

பெங்களூர் அணியுடனான இன்றையப் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை எடுத்தார். இந்த வெற்றிக்கு பின்பு உற்சாகமாக பேசினார் தோனி. அப்போது "இந்தப் போட்டியில் எல்லாமே சிறப்பாக அமைந்தது. திட்டமிட்டப்படி எல்லாம் நடந்தது. முதலில் பவுலிங் சிறப்பாக இருந்தது. சீரான இடைவெளியில் நாங்கள் பெங்களூர் விக்கெட்டுகளை எடுத்தோம்" என்றார்.

image


Advertisement

மேலும் பேசிய தோனி "பிட்ச் ஸ்லோவாக இருந்தது. இந்தத் தொடரில் நாங்கள் சீரான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. ஆனால் இன்று அது நடந்தது. ருதுராஜ் சிறப்பாக விளையாடினார். அவருக்கு எப்போது ஷாட்ஸ் ஆட வேண்டும் என்று தெளிவாக தெரிந்திருக்கிறது. அதன்படி அவர் ரன்களை சேர்த்தார். ஒரு மோசமான போட்டி மிகவும் உங்களை சோர்வுக்கு உள்ளாக்கும் உணர்ச்சிவசப்பட வைக்கும். அதனால்தான் ஒவ்வொரு போட்டியையும் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.

image

இறுதியாக பேசிய தோனி "புள்ளிகள் பட்டியலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. கிரிக்கெட்டை என்ஜாய் செய்து விளையாட வேண்டும். அப்படி இல்லையென்றால் ஒவ்வொரு போட்டியின் முடிவும் உங்களை காயப்படுத்தும். இந்தப் போட்டியில் இளம் வீரர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சி" என்றார்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close