ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூர் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பெங்களூரின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச்சும், தேவ்தத் படிக்கல்லும் முறையே 15 மற்றும் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கோலியுடன் இணைந்த டிவில்லியர்ஸ் ஜோடி அதிரடியாகவும் நிதானமாகவும் ஆடி ரன்களை சேர்த்தது.
இந்நிலையில் 36 பந்துகளில் 39 ரன்களை சேர்த்த டிவில்லியர் சஹார் பந்துவீச்சில் டூப்ளிசிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய மொயின் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த விராட் கோலி 43 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தபோது சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து வெற்றி இலக்கான 146 ரன்களை எடுக்க சென்னை அணியின் தொடக்க வீரர்களான டூப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டி விளையாடினர் இருவரும். முதல் 5 ஓவரில் 46 ரன்களை எடுத்தது. பின்பு டூப்ளசிஸ் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடர்ந்து ருதுராஜூடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயுடு நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த இருவரின் கூட்டணி அணியின் ஸ்கோரை 100 ரன்களுக்கு மேல் கொண்டு சேர்ந்தது.
நிலைத்து நின்று விளையாடிய ராயுடு 27 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தபோது சஹால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிக் கொண்டிருந்த ருதுராஜ் அரை சதம் கடந்தார். இதனையடுத்து வெற்றிக்கான இலக்கை நிதானமாகவும் தோனியும் ருதுராஜ் கூட்டணி தொடர்ந்தது விளையாடியது. இறுதியாக தோனி சில பவுண்டரிகளை அடிக்க 18.4 ஓவரில் வெற்றி 150 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 65 ரன்களை விளாசினார், தோனி 19 ரன்களை எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி இப்போது 8 புள்ளியை பெற்றுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?