துபாயில் நடைபெற்று வரும் இன்றைய ஐபிஎல் போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 145 ரன்களை எடுத்தது.
சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். பெங்களூரின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆரோன் பின்ச்சும், தேவ்தத் படிக்கல்லும் முறையே 15 மற்றும் 22 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கோலியுடன் இணைந்த டிவில்லியர்ஸ் ஜோடி அதிரடியாகவும் நிதானமாகவும் ஆடி ரன்களை சேர்த்தது.
இந்நிலையில் 36 பந்துகளில் 39 ரன்களை சேர்த்த டிவில்லியர் சஹார் பந்துவீச்சில் டூப்ளிசிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்கடுத்து களமிறங்கிய மொயின் அலி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த விராட் கோலி 43 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தபோது சாம் கரன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன்களை எடுத்தது.
இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிஎஸ்கே, பெங்களூரின் ரன் வேட்டையை கட்டுப்படுத்தியது. சிஎஸ்கேவில் சாம் கரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் டூப்ளெசிஸ் அசத்தலான 3 கேட்டுகளை பிடித்தார். இப்போது வெற்றி பெற 146 ரன்கள் என்ற இலக்குடன் களம் காண்கிறது சிஎஸ்கே.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!