[X] Close

"இது உங்களுக்காக அப்பா" - உருக வைத்த மந்தீப் சிங் !

Subscribe
Mandeep-Singh-pay-tribute-to-demised-father-in-twitter

தந்தை உயிரிழந்தது தெரிந்தும் ஹைதராபாத் அணியுடனான போட்டியில் பங்கேற்ற பஞ்சாப் அணி வீரர் மந்தீப் சிங்குக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்


Advertisement

ஹைதராபாத் அணிக்கு எதிரான மிக முக்கியப் போட்டியில் நேற்று பஞ்சாப் அணி மோதியது. அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றது. நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் மந்தீப் சிங்குக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அவரின் பின்னால் இருக்கும் சோகம் தெரியவந்தது.

image


Advertisement

மந்தீப்பின் தந்தை ஹர்தேவ் சிங் உடல்நலக்குறைவால் போட்டிக்கு முந்தைய இரவு உயிரிழந்துள்ளார். இந்த சோகத்துக்கு மத்தியிலும் விளையாடினார் மந்தீப். நீண்ட காலமாகவே உடல்நலக்குறைவால் அவரது தந்தை ஹர்தேவ் சிங் அவதிப்பட்டு வந்துள்ளார். கடந்த மாதம் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினர் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர், ஆனால் மேலும் அவரது உடல்நிலை மோசமடையவே சண்டிகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில்தான் நேற்று பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கு சச்சின் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் மந்தீப் சிங்குக்கு பாராட்டுகளையும், தந்தைக்கு இரங்கலையும் தெரிவித்தனர். இந்நிலையில் மந்தீப் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்ற  புகைப்படத்தை பகிர்ந்து  "இது உங்ளுக்காக அப்பா" என தெரிவித்துள்ளார். அவரது பதிவுக்கு பதிலளித்து  பலரும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close