டெல்லி அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் சுனில் நரைன் மற்றும் நிதிஷ் ரானாவின் அபாரமான பேட்டிங் காரணமாக அந்த அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்களை குவித்தது.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதனையடுத்து கொல்கத்தா முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில்லும், நிதேஷ் ரானாவும் களமிறங்கினார்கள். இதில் சுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்து ராகுல் திரிபாதியும் 13 ரன்களில் அவுட்டாக, தினேஷ் கார்த்திக் 3 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தார்.
ஒரு கட்டத்தில் கொல்கத்தா அணி 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து ரானாவுக்கு துணையாக களமிறங்கிய சுனில் நரேன் அதிரிடியாக விளையாடினார். சிறப்பாக விளையாடி அரை சதம் கடந்த நரைன் 32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தபோது ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ரானாவுடன், மார்கன் ஜோடி சேர்ந்தார். இதில் கடைசி ஓவரின் 4 ஆவது பந்தில் ரானா ஆட்டமிழந்தார். அவர் 53 பந்துகளுக்கு 81 ரன் விளாசினார். இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புகக்கு 194 ரன்களை சேர்த்தது. இதனையடுத்து டெல்லி வெற்றிப் பெற 195 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தரப்பில் ரபாடா, நார்ஜே, ஸ்டொய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Loading More post
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
“எரிபொருள் விலையின் மீதான வரி குறைப்பை அரசுகள் ஒருங்கிணைக்க வேண்டும்”- சக்தி காந்த தாஸ்
பெண் எஸ்பி பாலியல் புகார்: மேலும் 2 காவல் அதிகாரிகள் சிக்குகிறார்கள்?
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?