பன், வெங்காயம் இல்லாத பர்கர் ஆர்டர் ... போதைப் பெண்மணிக்கு ஊழியர்கள் கொடுத்த ஷாக்!

No-Bun---No-Onion-Woman-Orders-Burger--Gets-Only-Ketchup

குடி போதையில் பன், வெங்காயம் இல்லாத பர்கர் ஆர்டர் செய்த பெண்: தக்காளி சாஸ் கொடுத்து பில் வசூல் செய்த ஓட்டல்!


Advertisement

குடி போதையில் பன், வெங்காயம் இல்லாத பர்கரை செய்ய ஆர்டர் கொடுத்ததால் வெறும் தக்காளி சாஸைக் கொடுத்த சம்பவம் இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியுள்ளது.

image


Advertisement

கனடாவைச் சேர்ந்த் கேட்டி புல் என்ற பெண் வார இறுதியில் பிரபலமான கே.எஃப்.சி சென்று ’எனக்கு பர்கர் வேண்டும். ஆனால், பன் இல்லாத, கட்லெட் இல்லாத, வெங்காயம் இல்லாத, ஊறுகாய், இறைச்சி சேர்க்காத பர்கர்தான் வேண்டும்’ என்று ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தார். ஆர்டர் செய்யும் போது அவர் குடிபோதையில் இருந்துள்ளதாக தெரிகிறது.

அவரது ஆர்டரை கேட்டு திகைத்துப்போன கே.எஃப்.சி ஊழியர்கள் அப்படி ஒரு பர்கர் வேண்டும் என்றால் வெறும் தக்காளி சாஸ்தான் கிடைக்கும் என்று இரண்டு தக்காளி சாஸ் பாட்டில்களைக் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வசூலித்துக் கொண்டார்கள்.

 இந்த வேடிக்கையான சம்பவத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார், கேட்டி புல் கணவர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement