மதுரையில் பரிகாரம் செய்வதாக கூறி 3 பவுன் தாலிச்செயினை திருடிச்சென்ற மர்மநபர்..!

The-man-who-stole-a-3-pound-thali-chain-in-Madurai-claiming-to-be-making-amends

மதுரையில் மாங்கல்ய தோஷத்திற்கு பரிகாரம் செய்வதாக கூறி 3 பவுன் தாலிச்செயினை நூதனமாக திருடிச்சென்ற மோசடி நபரை காவல்துறை வலைவீசி தேடிவருகிறது.


Advertisement

image

மதுரை கீரைத்துறை ஆதிமூலம் பிள்ளை தெருவைச்சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி மாரியம்மாள் (45). இவருடைய கணவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்துள்ளார் மாரியம்மாள். இந்நிலையில் காவி வேட்டி அணிந்து கையில் குடுகுடுப்பையுடன் மூன்று பேர் அப்பகுதிக்கு வந்ததாக கூறப்படும் நிலையில், 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மாரியம்மாளுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், பரிகாரம் செய்யாவிட்டால் அசம்பாவிதம் ஏற்படும் என கூறியுள்ளார்.


Advertisement

 வீட்டிற்குள் அழைத்த மாரியம்மாளிடம், பரிகாரம் செய்ய புளி வேண்டும் எனவும், தாலிச்செயினை புளியில் வைத்து பூஜை செய்தால் மாங்கல்ய தோஷம் நீங்கும் என கூறியுள்ளார் அந்த இளைஞர். அதனை நம்பி 3 பவுன் தாலிச்செயினை கழட்டிக்கொடுத்துள்ளார். மேலும் புளிக்குள் தாலியை வைத்து பூஜை செய்த நபர் குடிக்க தண்ணீர் வேண்டும் எனக்கூறி, மாரியம்மாளின் கவனத்தை திசை திருப்பி தாலிச்செயினை நூதன முறையில் திருடிச்சென்றார்.

இது குறித்து மாரியம்மாள் கீரைத்துறை காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அப்பகுதியில் நடமாடிய குடுகுடுப்பை காரர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement