ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- ஹைதராபாத் அணிகள் இன்று 7.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் மோதுகின்றன.
துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இரு அணிகளுக்குமே வாழ்வா, சாவா ஆட்டமாகும். இந்த சீசனில் இரு அணிகளும் தலா 10 ஆட்டங்களில் விளையாடி 4-இல் மட்டுமே வெற்றி கண்டுள்ளன. சனிக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் இரு அணிகளும் களமிறங்குகின்றன.
இந்த சீசனில் தொடா் தோல்வியைச் சந்தித்த கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி, கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்றுள்ளது. குறிப்பாக, டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய 3 வலுவான அணிகளை வீழ்த்திய நிலையில் ஹைதராபாத் அணியை சந்திக்கிறது. அதேநேரத்தில் ஹைதராபாத் அணி கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்திய நிலையில் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.
பஞ்சாப் அணி வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. கே.எல்.ராகுல், மயங்க் அகா்வால், கிறிஸ் கெயில் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மிடில் ஆா்டரில் நிகோலஸ் பூரண் பலம் சோ்க்கிறார். அதேநேரத்தில் முன்னணி வீரரான கிளன் மேக்ஸ்வெல் ரன் குவிக்க முடியாமல் தொடா்ந்து தடுமாறி வருகிறார். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி, ஜேம்ஸ் நீஷம் கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய் கூட்டணியும் பலம் சோ்க்கிறது.
ஹைதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வார்னா், ஜானி போ்ஸ்டோவ், மணீஷ் பாண்டே, விஜய் சங்கா், பிரியம் கா்க் போன்றோர் பேட்டிங்கில் பலம் சோ்க்கின்றனா். வேகப்பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டா், சந்தீப் சா்மா, டி.நடராஜன் கூட்டணியையும், சுழற்பந்துவீச்சில் ரஷீத் கான் அசுர பலத்துடன் இருப்பது கூடதல் பலம்.
Loading More post
முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் அனுமதி!
இரவுநேர ஊரடங்கு: தென் மாவட்டங்களுக்கு பகலில் கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க திட்டம்!
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு - பியூஷ் கோயல்
பகலில் கூடுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
ரயில்களில் திரவ ஆக்சிஜனை கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி