மும்பைக்கு எதிரான போட்டியின்போது பேட்டிங் பவர்பிளேயின்போதே நாங்கள் தோற்றுவிட்டோம் என்று சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பாக இருந்த நேற்றைய போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பி 10 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையிடம் சரண்டர் ஆனது சென்னை அணி. இதனால் சென்னையின் 'பிளே-ஆஃப்' வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
மும்பை போட்டிக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீபன் பிளமிங் "பவர்பிளே மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அனைவரும் அதிர்ச்சியானோம் என்பதுதான் உண்மை. விக்கெட்டுகளை விரைவாக இழந்தோம். பவர்பிளேயிலேயே எங்களது தோல்வி உறுதியானது. இந்தப் போட்டியில் இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கினோம், ஆனால் அது சரியாக அமையாமல் போய்விட்டது. இன்னும் கொஞ்சம் ரன் அடித்திருந்தால் பலமான பவுலிங் வைத்து வெற்றிப் பெற முயற்சி செய்திருக்கலாம்" என்றார்.
மேலும் பேசிய அவர் "ஆடுகளம் அவ்வப்போது மாறும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இம்ரான் தாஹிரை அணிக்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார். எங்களது சுழற்பந்துவீச்சு நன்றாக இருந்தாலும் மோசமான பேட்டிங் அனைத்தையும் மோசமாக்கிவிட்டது" என்றார் ஸ்டீபன் பிளமிங்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!