திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் - சசிகலா புஷ்பா

Thirumavalavan-should-apologize-said-Former-MP-Sasikala-Pushpa

பெண்களை இழிவாக பேசியதற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா தெரிவித்துள்ளார். 


Advertisement

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்திப் பேசியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா தொல் திருமாவளவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில்,


Advertisement

''திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இந்து பெண்களை இழிவுபடுத்தி வீடியோ வெளியிட்டுள்ளார்.  திமுகவில் கடவுளை வழங்கும் இந்து பெண்கள் ஏராளம் பேர் உள்ளனர். அப்படி எனில் திருமாவளவனின் இந்த பேச்சு அவர்களையும் இழிவுபடுத்துவதாக ஆகும்.

எனவே திருமாவளவனின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்?. அவருடைய இந்த அநாகரிகமான பேச்சுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவேண்டும். திருமாவளவனும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement