ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து சென்னை பேட்டிங் செய்து வருகிறது.
இளம் வீரர்கள் கெய்க்வாட் மற்றும் ஜெகதீசனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்பட்டது.
டூப்லெஸியும், கெய்க்வாடும் சென்னைக்காக இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
போல்ட் வீசிய முதல் ஓவரில் கெய்க்வாட் LBW முறையில் அவுட்டானார். பும்ரா வீசிய அடுத்த ஓவரில் ராயுடுவும், ஜெகதீசனும் அடுத்தடுத்துபெவிலியனுக்கு நடையை கட்டினர்.
தொடர்ந்து போல்ட் வீசிய மூன்றாவது ஓவரில் டுப்லெஸியும் அவுட்டானார்.
சென்னை அணி வெறும் மூன்று ரன்கள் எடுத்த நிலையில் நான்கு விக்கெட்டுகளை இழந்தது ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
மீண்டும் போல்ட் வீசிய ஆறாவது ஓவரில் ஜடேஜாவும் அவுட்டாகி வெளியேறினார். வர்பிளே ஓவர் முடிவில் 24 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தது சென்னை.
ஏழாவது ஓவரை வீசிய ராகுல் சஹாரின் சுழலில் தோனியும் அவுட்டானார். ராகுல் சாஹர் வீசிய ஒன்பதாவது ஓவரில் தீபக் சாஹரும் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். 43 ரன்களுக்குள் சென்னை அணி 7 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையில் உள்ளது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!