நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட மங்கிவிட்டது. பத்து போட்டிகளில் ஏழு தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் பின்தங்கியுள்ளது.
இந்நிலையில், சென்னை அணி இந்த சீசனில் பின்தங்கி இருப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நியூசிலாந்து மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ்.
“இதை சொல்ல கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. இருப்பினும் சொல்லியாக வேண்டும். நடப்பு சீசனில் இருந்து தற்போதை நிலவரப்படி சென்னை அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறி உள்ளனர்.
அதனை கடந்த போட்டிக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் சொன்ன வார்த்தைகளை வைத்தே சொல்லி விடலாம். அந்த அணியின் வாழ்நாள் முடிந்துவிட்டதாகவே அவர் சொல்லியிருந்தார்.
அதை தான் கடந்த மூன்றாண்டுகளாக எல்லோரும் சொல்லி வருகிறோம். வயசான டீம். ஒரு கட்டத்தில் வயோதிகத்தினால் டீம் வீழ்ச்சியை சந்திக்கும் என எதிர்பார்த்தது தான். இந்த சீசனில் அந்த சிக்கலை சென்னை சந்தித்துள்ளது.
சீனியர் வீரர்களும், ஃபார்ம் அவுட்டும் வீழ்ச்சிக்கு காரணம். டூப்லெஸி மற்றும் தீபக் சஹாரை தவிர மற்ற அனைவரும் சொதப்பி வருகின்றனர். அதை தவிர சொல்வதற்கு வேறொன்றும் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
"சிறுவர்கள் சிலம்பம் சுற்றி கொரோனாவை ஓட ஓட விரட்டுவதுபோல் இருந்தது"- தெலங்கானா ஆளுநர்
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு செல்ல 8 புதிய ரயில்கள்!
மலபார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து!
மழைநீர் தேக்கத்திற்கு ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே காரணம் - கனிமொழி
நீதிபதிகள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு ஆடிட்டர் குருமூர்த்தி வருத்தம்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு