ஆசீர்வாதம் செய்த பாதிரியாரிடம் சிறுமி ஒருவர் ஹைஃபை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
குழந்தைகள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அவர்களின் குறும்புத்தனமும் வெகுளித்தனமும்தான். விவரம் தெரியாத குழந்தைகளை நம் கட்டுக்குள் வைக்க நினைத்து தோற்றுப்போவதே விவரம் தெரிந்த பெரியவர்களின் வாடிக்கையாக உள்ளது.
மிகவும் சீரியஸான இடங்களில்கூட குழந்தைகள் செய்யும் சுட்டித்தனம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திவிடும். அந்த வகையில் சிறுமி ஒருவர் செய்யும் செயல் அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏன்?... ஜெபம் செய்யும் பாதிரியாரையே சிரிக்க வைத்திருக்கிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Father is saying a blessing.
The innocence of a child.
They’re trying not to laugh.
Best thing you’ll see today... pic.twitter.com/8ueI8JLhnf — Rex Chapman?? (@RexChapman) October 21, 2020
அந்த வீடியோவில் ஒரு தாயும் சிறுமியும் சர்ச்சில் ஜெபம் செய்துவிட்டு பாதிரியாரிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றனர். அப்போது பாதிரியார், ஒரு கையை மேலே தூக்கி ஜெபம் சொல்லி ஆசிர்வாதம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது அந்த சிறுமி, பாதிரியார் ஹஃபை காட்டுக்கிறார் என நினைத்து அவரின் கையில் ஹைஃபை அடிக்கிறது. இதையறிந்த அந்த பாதிரியார் சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் கையை வைத்து மறைத்து சிரித்துவிட்டு ஜெபத்தை தொடர்கிறார்.
இத்தகைய காட்சியை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ஆனால் சிலர், தாயும் சிறுமியும் மாஸ்க் அணிந்திருக்கும்போது பாதிரியார் ஏன் மாஸ்க் அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!