ஆசீர்வாதம் செய்த பாதிரியார்; ஹைஃபை அடித்த சிறுமி.. வைரலாகும் க்யூட் வீடியோ

Priest-raises-hand-to-bless-little-girl-she-gives-him-a-high-five

ஆசீர்வாதம் செய்த பாதிரியாரிடம் சிறுமி ஒருவர் ஹைஃபை அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

குழந்தைகள் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருவது அவர்களின் குறும்புத்தனமும் வெகுளித்தனமும்தான். விவரம் தெரியாத குழந்தைகளை நம் கட்டுக்குள் வைக்க நினைத்து தோற்றுப்போவதே விவரம் தெரிந்த பெரியவர்களின் வாடிக்கையாக உள்ளது.

மிகவும் சீரியஸான இடங்களில்கூட குழந்தைகள் செய்யும் சுட்டித்தனம் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்திவிடும். அந்த வகையில் சிறுமி ஒருவர் செய்யும் செயல் அனைவர் மனதிலும் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஏன்?... ஜெபம் செய்யும் பாதிரியாரையே சிரிக்க வைத்திருக்கிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

அந்த வீடியோவில் ஒரு தாயும் சிறுமியும் சர்ச்சில் ஜெபம் செய்துவிட்டு பாதிரியாரிடம் ஆசீர்வாதம் வாங்குகின்றனர். அப்போது பாதிரியார், ஒரு கையை மேலே தூக்கி ஜெபம் சொல்லி ஆசிர்வாதம் செய்ய முயற்சிக்கிறார். அப்போது அந்த சிறுமி, பாதிரியார் ஹஃபை காட்டுக்கிறார் என நினைத்து அவரின் கையில் ஹைஃபை அடிக்கிறது. இதையறிந்த அந்த பாதிரியார் சிரிப்பை அடக்க முடியாமல் வாயில் கையை வைத்து மறைத்து சிரித்துவிட்டு ஜெபத்தை தொடர்கிறார்.

இத்தகைய காட்சியை அங்கிருந்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி சுமார் 2 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ஆனால் சிலர், தாயும் சிறுமியும் மாஸ்க் அணிந்திருக்கும்போது பாதிரியார் ஏன் மாஸ்க் அணியவில்லை என கேள்வி எழுப்பியுள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement