ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க வருகை தரும் இந்திய கிரிக்கெட் வீரர்களை குடும்பத்துடன் வர அனுமதியுங்கள் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
ஐபிஎல் தொடர் நிறைவடைந்த பின்பு இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி பங்கேற்க இருக்கிறது. இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 15 ஆம் தேதி தொடங்குகிறது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் தொடரில் இந்திய வீரர்கள் மட்டுமே வர வேண்டும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் "தி இந்து" நாளிதழுக்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் "கொரோனா பாதுகாப்பு வளையம் காரணமாக வீரர்களை மட்டும் அனுப்புமாறு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது. வீரர்கள் மட்டும் அல்ல குடும்பத்தினரும் கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருப்பார்கள். அதனால் குடும்பத்தினரையும் அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார் அவர்.
மேலும் "ஏற்கெனவே ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் குடும்பத்தினருடன் இல்லாமல் இருக்கின்றனர். குறைந்தபட்சம் வீரர்களுடன் அவர்கள் குடும்பத்தினருடன் சில காலம் இருந்தால் நன்றாக இருக்கும். இந்தக் கோரிக்கையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஏற்கும் என நம்புகிறோம். விரைவில் இதற்கு தீர்வும் எட்டும்" என்றார் அந்த பிசிசிஐ அதிகாரி.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்