கொரோனா பரவலை அடுத்து, சென்னையில் நடத்தப்பட்ட நோய் எதிர்ப்பு திறன் கண்டறியும் ஆய்வில் 32.3 சதவீதம் பேருக்கு எதிர்ப்பு சக்தி இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரம் தமிழகம் முழுவதும் இந்த ஆய்வு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவக் கவுன்சிலான ஐசிஎம்ஆர், நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது. இதில் 1.2% பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உருவாகி இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. சென்னையின் 15 மண்டலங்களிலும் மாநகராட்சி சார்பில் இருகட்டமாக நடத்தப்பட்ட ஆய்வில், சென்னைவாசிகளில் 32.3% பேருக்கு நோய் எதிர்ப்புத் திறன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் சுற்றித்திரிந்த நீலகிரி மரநாய் - வைரல் வீடியோ
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, 32.3% பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் உருவாகியிருப்பதாக தெரிந்தாலும், முகக்கவசம் அணிவதும், தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதும் மிகவும் முக்கியம் என தெரிவித்துள்ளார். எதிர்ப்புத்திறன் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டாலும் எத்தனை நாட்கள் இந்த எதிர்ப்புத்திறன் உடலில் இருக்கும் என்பது உறுதி செய்யப்படாததால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் மக்களின் நோய் எதிர்ப்புத்திறனை கண்டறியும் ஆய்வு, சுகாதாரத்துறை சார்பில் தொடங்கியுள்ளது. இதற்காக மும்பையைச்சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 3,690 பேர், கோவையில்1,260 பேர், திருச்சியில் 1,140 பேர் என தமிழகம் முழுவதும் 26,640 பேரிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் 2ஆம் வாரத்திற்குள் இந்த ஆய்வு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!