தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே வேளையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் ஆறரை லட்சத்தை கடந்திருப்பது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 77 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 193 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் ஒரே நாளில் 4 ஆயிரத்து 314 பேர் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 55ஆயிரத்து 170 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரேநாளில் 45 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், உயிரிழப்பின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது. சென்னையிலும் பாதிப்பு எண்ணிக்கை 4ஆவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் 833 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் பிற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் 285 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 193 பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 170பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 155 பேரும், சேலம் மாவட்டத்தில் 140 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 99 பேரும் ஒரே நாளில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
Loading More post
மீண்டும் திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றிய பிரதமர் மோடி..
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
திமுக - காங்கிரஸ் இடையே 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் - கே.எஸ்.அழகிரி
9, 10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக அரசு
தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது வரம்பு 60 ஆக உயர்வு
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!