கள்ளக்குறிச்சியில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் முதியவரின் கைவிரலை விவசாயி கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள சிறுநாகலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருபாகரன். இவரது தந்தை கலியதுரை நேற்று முன்தினம் இயற்கை உபாதைக்காக, அதே ஊரை சேர்ந்த விவசாயி ஆறுமுகம் என்பவரின் வீட்டை கடந்து சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த ஆறுமுகம் அவரை வழிமறித்து தகாத வார்த்தைகளில் திட்டியதாக தெரிகிறது. இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஆறுமுகம் கலியதுரை வலது கையின் நடுவிரலை கடித்து துப்பியுள்ளார். அத்துடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதற்கிடையே படுகாயமடைந்த கலியதுரை சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கலியதுரை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரின் மகன் கிருபாகரன் அளித்த புகாரின்பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் ஐஜேகே, ச.ம.கட்சிக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை