[X] Close >

‘ஓடினேன்… ஓடினேன்… மைதானத்திற்கு வெளியே இருந்த சாலைக்கே ஓடினேன்’ தாஹிர் உருக்கம்

ONCE-UPON-A-TIME-I-RAN-OUTSIDE-THE-GROUND-TO-CELEBRATE-MY-WICKET-SAYS-CSK-PLAYER-IMRAN-THAHIR

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் விக்கெட் வீழ்த்தியதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்தின் பவுண்டரி லைனை நோக்கி இரண்டு கைகளையும் விரித்த படி ஓட்டம் எடுப்பார்.


Advertisement

image

அது தாஹிரின் டிரேட் மார்க் கொண்டாட்டமும் கூட. உள்ளூர் கிரிக்கெட் முதல் சர்வதேச கிரிக்கெட் வரை தாஹிர் இதனை பின்பற்றுவது வழக்கம். 


Advertisement

அது சமூக வலைத்தளங்களிலும் சமயங்களில் வைரலாவது உண்டு. 

image

இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் அஷ்வின் யூடியூப் சேட் ஷோவில் ‘ஏன் விக்கெட் எடுத்ததும் பல மைல் தூரம் ஓட்டம் எடுக்கிறீர்கள்? அதற்கான காரணம் என்ன?’ என தாஹிரிடம் கேட்டார்.


Advertisement

image

“அதை பேஷன் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அது எங்கிருந்து வந்தது என எனக்கு தெரியாது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் விளையாடிய போது விக்கெட் வீழ்த்தியதும் அந்த சந்தோஷத்தில் ஓடினேன்… ஓடினேன்… மைதானத்திற்கு வெளியே இருந்த சாலை வரை ஓடி நின்றேன். 

பின்னர் மீண்டும் பொடி நடையாக மைதானத்திற்குள் வந்தேன். அப்போது அங்கு குழுமியிருந்தவர்கள் என்னை  பார்த்து சிரித்தனர். மற்றவர்களுக்கு வேடிக்கையாக இருந்தாலும், எனக்கு அப்படி தெரியவில்லை” என தாஹிர் தெரிவித்துள்ளார். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close