தன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்த சிறுவன்... கொலை செய்து புதைத்த இளைஞர் கைது

The-boy-who-refused-to-race-for-homosexuality-The-youth-who-killed

மரக்காணம் அருகே உள்ள நொச்சிக்குப்பத்தில் தன்பாலின சேர்க்கைக்கு இணங்க மறுத்ததால் 13 வயது சிறுவனை, இளைஞர் கொலை செய்துள்ளார்.


Advertisement

 

image


Advertisement


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் தேவன்ராஜ் (13). இவரை கடந்த 09-10-2020 தேதி முதல் காணவில்லை என தந்தை கோவிந்தராஜ் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர்.

 

image


Advertisement


இந்நிலையில் சிறுவனின் தொலைபேசிக்கு கடைசியாக தொடர்பு கொண்டவர்களிடம் மரக்காணம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கலைமணி என்பவரின் மகன் அபினேஷ் என்ற இளைஞர், சிறுவன் தேவன்ராஜிடம் கடைசியாக பேசியது தெரியவந்தது. இதனையடுத்து அபினேஷை போலீசார் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.

 

image


விசாரணையில் அபினேஷ் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து அபினேஷை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் 13 வயது சிறுவனை கிளி பிடிக்க வருமாறு அழைத்து சென்று தன்பாலின சேர்க்கையில் ஈடுபட முயன்றபோது சிறுவன் மறுத்ததால் கழுத்தை நெரித்து கொலை செய்து தன்பாலின சேர்க்கையில் ஈடுபட்டு பின் சுடுகாட்டில் புதைத்தது தெரியவந்துள்ளது. ஏற்கெனவே தனது தந்தை கலைமணிக்கும் கோவிந்தராஜ்க்கும் சீட்டு விளையாடும்போது ஏற்பட்ட பிரச்சனைக்கு பழிக்கு பழி வாங்கவே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

image


இதனையடுத்து அபினேஷை மரக்காணம் போலீசார் கைது செய்து சிறுவன் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்த உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்தனர். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இதே போன்று ஒரு சிறுவனை கொலைசெய்து சவுக்கு தோப்பில் வீசியதாகவும் அபினேஷ் கூறியுள்ளான்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement