சிஎஸ்கே வீரர் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு போஸ்டரை பதிவிட்டுள்ளார்.
எப்போதும் இல்லாத அளவிற்கு நடப்பு ஐபிஎல் சீசனில் பத்து ஆட்டங்கள் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெறும் மூன்று ஆட்டங்களில் தான் வென்றுள்ளது. ஐபிஎல் என்றாலே அதில் தோனி தலைமையிலான சென்னை அணியின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். ஆனால் இந்த முறை அது எல்லாம் மொத்தமாக மிஸ் ஆகியுள்ளது.
வீரர்களின் தேர்வு சொதப்பல், ரெய்னா - ஹர்பஜனுக்கு மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்யாதது போன்ற பல காரணங்கள் சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணமாக சொல்லப்படுகிறது. தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது சென்னை. மற்ற அணிகள் சென்னைக்கு சாதகமாக தோல்வியை சந்தித்து புள்ளியில் வீழ்ந்து சென்னையும் அடுத்த எல்லா போட்டிகளிலும் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப்க்கு செல்லும் வாய்ப்புள்ளது சென்னைக்கு.
இந்நிலையில் சிஎஸ்கே வீரர் ஜடேஜா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஊக்கப்படுத்தும் விதமாக ஒரு போஸ்டரை பதிவிட்டுள்ளார். அதில் நம்மால் வெற்றி பெற முடியும். நாம் வெற்றி பெற வேண்டும். நாம் வெற்றி பெறுவோம் என (We can win, we must win, we will win) எனக்குறிப்பிட்டுள்ளார்.
Loading More post
’8 ரன் கொடுத்து 5 விக்கெட்’ மிரட்டிய ஜோ ரூட் - 145 ரன்னில் சுருண்ட இந்திய அணி!
கோவை: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களுக்கு மலர்தூவி பிரதமர் மோடி மரியாதை
சீமானுக்கு டாடா... ‘தமிழ் தேசிய புலிகள்’ புதிய கட்சியை தொடங்கினார் மன்சூர் அலிகான்!
தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது: ஐகோர்ட்டில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்
சமூக வலைதள நிறுவனங்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த மத்திய அரசு!
அப்போது பெட்ரோல்... இப்போது சிலிண்டர்... - சிலிண்டருக்கு இனி வாரம்தோறும் விலை நிர்ணயமா?
9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்: அக்கறையா, அரசியல் ஆதாயமா? - ஒரு பார்வை
"இவ்வளவு வரவேற்பு கிடைக்கும்னு நினைக்கல!" - நிச்சயதார்த்த மோதிரத்தில் திருக்குறள்
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?