ஐபிஎல்-ல் 2வது வீரராக 500 பவுண்டரிகளை அடித்த விராட் : முதல் வீரர் யார் ?

Virat-Kohli-hits-500-boundaries-in-IPL

ஐபிஎல் போட்டிகளில் 500 பவுண்டரிகளை அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றிருக்கிறார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் 39வது லீக் போட்டி இன்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த கொல்கத்தா 84 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 2வது பேட்டிங் செய்த பெங்களூர் அணி 13.3 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

image


Advertisement

இந்தப் போட்டியில் 17 பந்துகளை சந்தித்த பெங்களூர் கேப்டன் விராட் கோலி 18 ரன்களை சேர்த்தார். இதில் இரண்டு பவுண்டரிகளும் அடங்கும். இதன்மூலம் ஐபிஎல் தொடரில் 500 பவுண்டரிகளை அடித்த 2வது பேட்ஸ்மேன் என்ற பெருமையை விராட் கோலி அடைந்திருக்கிறார். ஏற்கெனவே இந்திய பேட்ஸ்மேன் ஷிகர் தவான் ஐபிஎல் போட்டிகளில் 547 பவுண்டரிகளை விளாசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement