கோவையில் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் பிரியாணி உணவகத்தை சங்கீதா என்ற திருநங்கை அண்மையில் தொடங்கியிருந்த நிலையில், வீட்டில் அவர் திடீரென சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கோவை சாயிபாபா காலனி பகுதியில் வசித்து வந்தவர் திருநங்கை சங்கீதா. இவர் திருநங்ககைகள் நல்வாழ்விற்காக தொடர்ந்து பணியாற்றி வந்தார். கடந்த மாதம் டிரான்ஸ் கிச்சன் என்ற பெயரில் தமிழகத்திலேயே முதல்முறையாக திருநங்கைகளால் இயங்கும் பிரியாணி விற்பனை உணவகத்தை அவர் ஆரம்பித்தார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அவரது தொலைபேசி எண் அணைத்து வைக்கப்பட்டு இருந்ததால், உடன் இருந்த திருநங்கைகள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது உடலில் வெட்டுக் காயங்களுடன் தண்ணீர் டிரம்பில் உடல் அடைக்கப்பட்ட நிலையில் அவர் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சாயிபாபா காலனி காவல்நிலையத்தில் இருந்து சில அடி தூரத்திலேயே சங்கீதா வசித்த வீடு அமைந்துள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தகவலறிந்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!