அமெரிக்காவில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குட்டி கொரில்லா: க்யூட் வீடியோ

Gorilla-gives-birth-to-a-baby-boy-at-Franklin-zoo-America

அமெரிக்காவில் விலங்கியல் பூங்கா ஒன்றில் கொரில்லா ஒன்று குட்டி ஈன்றுள்ளது.


Advertisement

போஸ்டனில் உள்ள ஃபிராங்ளின் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்டுவரும் 39 வயதான கிகி‌ என்ற கொரில்லா ஆண் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. குழந்தைப் பிறப்புக்கு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னரே தாய்க்கு சிரமம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக குட்டியை எடுத்துள்ளனர். 

ஊருக்குள் புகுந்த சிறுத்தைக் குட்டி.. கட்டியிருந்த மாடுகள் மீது பாய்ச்சல்: வீடியோ 


Advertisement

சாதாரணமாக கொரில்லா குட்டிகள் 3-5 பவுண்டுகள் மட்டுமே எடை இருக்கும். ஆனால் இந்த குட்டி 6 பவுண்டுகள் மற்றும் 3 அவுன்ஸ் எடையுடன் அதாவது, 2 கிலோ 700 கிராம் எடைகொண்டுள்ளது. இந்த குட்டியை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்துவருகின்றனர். பெயரிடப்படாத இந்த குட்டியைப் பார்க்க பார்வையாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

 


Advertisement

கொரில்லாவும் அதன் குட்டியும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement