”200 ரூபாய்க்கு குறைவா இருந்தா அடிப்பார்” மகனை பிச்சையெடுக்க கட்டாயப்படுத்திய கொடூர தந்தை!

Father-arrested-for-forcing-his-to-beg-in-Rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் தனக்கு மது தேவைப்படும் போதெல்லாம் தனது 11 வயது மகனை பிச்சையெடுக்க கட்டாயப்படுத்தி அடித்து துன்பப் படுத்தியுள்ளார் ஒரு கொடூரத் தந்தை.


Advertisement

ஞாயிற்றுக்கிழமை சிறுவனின் தந்தைக்கு மது தேவைப்பட்டதால் பிச்சை எடுக்கச் சொல்லி வறுபுறுத்தி இருக்கிறார். அதற்கு சிறுவன் மறுப்புத் தெரிவிக்கவே குச்சியால் பயங்கரமாக அடித்ததுடன், அழுது சத்தம்போடக் கூடாது எனவும் மிரட்டி இருக்கிறார்.

இதனால் மனமுடைந்த சிறுவன் குழந்தைகள் பாதுகாப்பு எண்ணிற்கு தொடர்புகொண்டிருக்கிறான். சிறுவனின் வீட்டிற்கு சென்ற காஞ்ச் போலீஸார் சிறுவனின் அவலநிலை கண்டு, அவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி இருக்கின்றனர்.


Advertisement

image

விசாரணையில், அந்த சிறுவன் பள்ளிக்கு சென்று வந்ததாகவும், ஊரடங்கு காலத்திலும் ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெற அவன் தந்தை உதவியதாவும் கூறியுள்ளான். ஆனால், அவருக்கு மது தேவைப்படும் போதெல்லாம் பிச்சையெடுக்க செல்லவேண்டும் எனவும், 200 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அடித்து துன்புறுத்துவார் என்றும் கூறியுள்ளான்.

உயரதிகாரியால் பாலியல் தொல்லை?.. ஆரம்ப சுகாதார நிலைய பெண் மருத்துவர் தர்ணா போராட்டம்.. 


Advertisement

மேலும் தனது அம்மாவையும் இதேபோல் தினமும் அடித்து கொடுமைப்படுத்துவார் என்றும் கூறியிருக்கிறான். இதனால் அந்த நபரை கைது செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்குக் கொடுத்த தகவலில் போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும் சிறுவனை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement