முறிந்த கைகள், உடைந்த முதுகெலும்பு.. நம்பிக்கையுடன் டீவிற்கும் 70வயது முதியவர்!! வீடியோ

Viral-video--70-Year-Old-Tea-Seller-With-Broken-Arm-Moves-Internet-With-His-Story

டெல்லி துவாரகா செக்டார் பகுதியில் 70 வயது முதியவர் ஒருவர் உடைந்த கைகள் மற்றும் காயம்பட்ட முதுகெலும்புடன் டீ விற்பனை செய்து வருகிறார்.


Advertisement

டெல்லி மால்வியா நகரிலுள்ள முதியவர் ஒருவர் நடத்திவரும் சிறிய உணவகமான 'பாபா கா தாபா', ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக ஒரே இரவில் பரபரப்பை ஏற்படுத்தியது, அதுபோல சிறிய டீக்கடை வைத்திருக்கும் 70 வயது முதியவரின் கதை தற்போது இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது.

துவாரகா செக்டர் 13 பகுதிக்கு அருகில் எலும்பு முறிந்த கை மற்றும்  காயம்பட்ட முதுகெலும்புடன்  ஒரு முதியவர் தனது மனைவியுடன் இணைந்து தேநீர் விற்கிறார்.  ஃபுடிவிஷால் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இந்த வீடியோவில் “குடிபோதையில் இருந்த இந்த முதியவரின்  மகன் அவரைத் தாக்கி, கையை உடைத்து, அந்த தம்பதியினரை வீட்டை விட்டு விரட்டியடித்தார். மேலும் அவரது மருமகன் தாக்கியதால் அந்த முதியவரின் முதுகெலும்பும் காயமடைந்தது.  இந்த சூழலில் அவர்களின் மகள் ஒரு சிறிய தேநீர் கடையை அமைக்க உதவியுள்ளார்” என கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மாதங்களில் வருமானத்துக்கு மிகவும் சிரமப்பட்டதாக அந்த முதியவர் தெரிவித்துள்ளார். தற்போதே இந்த வீடியோவுக்கு பலரும் ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். பல பிரபலங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க நபர்கள் இந்த தம்பதியருக்கு உதவுவதாகவும் கூறியுள்ளனர்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement